
பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் உள்ள லிங்க்கில் கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு கிளிக் செய்கிறோம். இதன் மூலம் புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அந்த லிங்க்கில் உள்ள தளம் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த டேப்பிற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்பட மாட்டீர்கள். நீங்கள் பழைய டேப் உள்ள தளத்திலேயே இருப்பீர்கள். புதிய லிங்க் அல்லது டேப் மூலமாக தளம் திறப்பதே, அந்த தளத்தை உடனே பார் க்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் ஏன் பழைய தளத்திலேயே பயர்பாக்ஸ் நம்மை வைத்துள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த வழக்கத்தினை, சிறிய செட்டிங்ஸ் மாற்றம் மூலம் மேற்கொள்ளலாம். Tools மெனு கிளிக் செய்து, அதில் Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Tabs என்பதைக் கிளிக் செய்திடவும்.
இங்கு கிடைக்கும் விருப்பத்தேர்வில், இறுதியாக When I open a link in a new tab, switch to it immediately என்று ஒரு வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பத்தின் பேரில், புதிய டேப் ஒன்றைத் திறக்கையில், அதில் உள்ள தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
Related Article:
0 comments:
Post a Comment