Friday, January 14, 2011

தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு



கொச்சி: அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை 116 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டி வங்கக்கடலில் இவை இருப்பது தெரியவந்துள்ளது. ஆழ்கடலில் இருக்கும் மீன், நண்டு உள்ளிட்ட உயிரினங்கள் பற்றி மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகம் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. ‘சாகர் சம்ப்டா’ என்ற ஆராய்ச்சிக் கப்பலின் உதவியுடன் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேரள மாநிலம் கொச்சி அருகே வங்கக்கடலில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அழிந்து விட்டதாக கருதப்படும் ஒருவகை வவ்வால் மீன், கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை தற்போதும் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உயிரினங்கள் ஆழ்கடலில் சுமார் 265 மீட்டர் முதல் 457 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியவை. 116 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது:

உலகின் பல பகுதிகளிலும் வவ்வால் மீன்களில் 9 வகைகள் இருக்கின்றன. இதில் 4 வகை இந்தியாவில் உள்ளவை. இவை கடல் பாசி, நுண்ணிய கடல்வாழ் புழுக்கள், மிகச்சிறிய மீன்களை உணவாக கொள்பவை. இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், செங்கடல் மற்றும் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, தைவான், சீனாவை ஒட்டி அதிகம் காணப்படுகின்றன. மன்னார் வளைகுடாவில் அதிகம் இருப்பவை கத்தி மீன்.

வெள்ளி நிறத்தில் தட்டையாக இருக்கும். பெரும்பாலும் பவளப்பாறை, அதிக சேற்றுப்பகுதியில் உயிர் வாழும். மீன்களைப் போல் நீந்தாமல், செங்குத்தாக நீந்தும். இவற்றை சாப்பிட முடியாது. அழகுக்காக வளர்க்கப்படுபவை. கடைசியாக 1898 ல் அந்தமான் கடல் பகுதியில் பிடிக்கப்ட்டது.

இன்னொரு அரிய உயிரினம் தவளை நண்டு. தவளை மற்றும் நண்டின் கலப்புத் தோற்றம் கொண்டது. இதில் 11 வகைகள் உள்ளன. அவற்றில் 3 வகை இந்தியாவில் காணப்பட்டவை. தொடர்ந்து நடந்து வரும் ஆராய்ச்சியில் மேலும் பல உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று


Thanks to tamilcnn

Related Article:

0 comments:

Post a Comment


 
Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog